fbpx

An Authentic Chettinad Wedding at Devakottai, Karaikudi | ARUNACHALAM – KALYAN

An Authentic Chettinad Wedding at Devakottai, Karaikudi | ARUNACHALAM – KALYAN

 

 

செட்டியார்கள் காரைக்குடி மன்னர்களாக இருந்தனர். நட்டுக்கோட்டை செட்டியார்கள் காவேரி பூம்பட்டிணத்தில் இருந்து காரைக்குடிக்கு குடியேறியபோது அவர்களின் கதை தொடங்குகிறது. அவர்கள் தங்கள் கட்டிடங்களின் பெருமைக்கு புகழ்பெற்றவர்கள். பாரம்பரியத்தின் அழகும் , சாராம்சத்தின் வண்ணமயமும் கொண்ட செட்டியார்கள், பெரும்புகழ் கொண்டு வாழும் வழிகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர் . ஒளிர்மிகு விளக்குகளை இத்தாலியில் இருந்தும், மரங்களை பர்மாவிலிருந்தும் நிலம் மற்றும் கடல் வழியாக இறக்குமதி செய்து, பெரிய அரண்மனைகளைக் கட்டினர். அவை மரத்தாலான தூண்கள் மற்றும் பண்டைய பொருள்களை கொண்டதாக இருந்தன. அவை அவர்களின் வாழ்க்கை முறைமையை மகிமைப்படுத்தின. 130 ஆண்டுகளுக்கு மேல் தன் பெருமையை சுமந்து நிற்க்கும், பாரம்பரியம் கொண்ட ஒரு செட்டியார் வீட்டின் திருமண விழாவை பதிவு செய்ய எங்களை கேட்டுக்கொண்டபோது நாங்கள் மிகவும் ஆர்வத்தோடு அணுகினோம். நம் வரலாறு மற்றும் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்ற இடங்களில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்பொழுது பெருமையாய் இருக்கின்றது. திருமண விழாக்களை பழம்பெருமை கொண்ட தங்கள் வீட்டில் நடத்தும் பாரம்பரியத்தை முன்னெடுத்து வருகின்றனர் செட்டியார்கள் . கல்யாணி, அருணாசலம் திருமணமும் , காரைக்குடியில் உள்ள தேவக்கோட்டை நகராட்சியில், தங்கள் மூதாதையர்களின் ஒரு வீட்டில் நடைபெற்றது. குடும்பத்தின் பெருமையை காத்து வாழ்ந்து வந்த தங்கள் மூதாதையர்களின் வீட்டில் திருமணங்களை நடத்துவதன் மூலம் தம்பதிகளின் வாழ்வில் ஆசீர்வாதம் நிறையும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கலாச்சாரத்தில் மாற்றம் நிகழும் இக்காலத்தில் முன்னோர்களை மதிக்கும் பாரம்பரியத்தை எண்ணும்பொழுது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றது. வீடு பிரம்மாண்டமாய் இருந்தது. தம்பதியரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குடும்பத்தினர் அனைவரும் திருமண வீட்டில் ஒன்று கூடினர். திருமண விருந்து கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. அந்த பாரம்பரியம் கொண்ட வீட்டின் கதைகளையும் திருமண விழாவையும் பதிவு செய்தோம். அவர்களுடைய பாரம்பரியத்தின் மகிமையையும் அவர்களுடைய நிலத்தின் பெருமைகளையும் காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கள் மூதாதையரின் அடிச்சுவடுகளை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்! தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் மற்றும் தங்கள் உறவுகள், நண்பர்களிடையே இந்த காணொளியை பகிருகங்கள். நன்றி !!!

The Chettiars were the kings of Karaikudi. Their story begins when the Nattukottai Chettiars migrated to Karaikudi from Cauvery Poompattinam and their legacy continues to this day. They are famous for the grandeur of their buildings – pristine in heritage, colorful in essence and convenient in aesthetics – the Chettairs were true connoisseurs of all the fine sophisticated way of living. They brought their chandeliers from Italy, their wood was imported from Burma via land and sea, they built huge palaces which housed wooden pillars and objects of antiquity that truly glorified their lifestyle. When we were asked to shoot a wedding inside one of these legacy homes – the Chettiar-homes – over 130 years old, we were truly anxious and grateful. It is such an honor for us to shoot weddings at places that are touchstones to our history and heritage. The Chettiars also carry forward the legacy of hosting their family weddings in their family homes and Kalyani & Arunachalam’s wedding was also held at one of their ancestral homes at Devakottai, Karaikudi, Tamilnadu, INDIA. They believe that their ancestors still live in thought and spirit in their family homes and make it a point to welcome their blessings into the couple’s life by conducting the weddings in their ancestral houses. What a truly delightful tradition that respects the ancestors while also giving in to the trends of the times. The house was huge, and all of the couple’s friends and relatives assembled at the family home for the wedding. The wedding feast was unimaginable. We thrived in the stories, in the heritage and we shot extraordinary motions their wedding at the backdrop of their ancestral home at Karaikudi. We truly hope that they follow in the footsteps of their ancestors in preserving the glory of their heritage and the pride of their land! Here is the real An Authentic Chettinad Wedding of course shots from their 130-year-old ancestral authentic Chettinad house, drop your valuable comments folks.

An Authentic Chettinad Wedding at Devakottai, Karaikudi | ARUNACHALAM – KALYAN 

You May Also Love
Share Your Love

Your email address will not be published.Required fields are marked *

loader